கிரைம்கார்னர்
ஆற்றில் மூழ்கி முதியவர் பலிஹாவேரி, ஹனகல்லின், கொடலா கிராமத்தில் வசித்தவர் கல்லப்பா ஹுருளிகுப்பி, 80. இவர் நேற்று காலை, வரதா ஆற்றில் கை, கால் கழுவியபோது, கால் தவறி ஆற்றுக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்தார்.சாம்பாருக்கு சிறுமி பலிஹாவேரி, ஷிகாவியின், ராம்புரா கிராமத்தில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு, ருக்சானா பானு என்ற, இரண்டரை வந்து சிறுமி, தன் பெற்றோருடன் சென்றிருந்தார். எதிர்பாராமல் சிறுமியின் மீது சூடான சாம்பார் கவிழ்ந்தது. காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார்.செயின் பறிப்புதுமகூரின் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சுதீப், 28, ஷாயிப், 29, ஆகியோரை, துமகூரு நகர் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன.கரும்பு தீக்கிரைமாண்டியாவின், மாரேனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி சதீஷ்குமார், வேறு ஒருவரிடம் நிலம் ஒப்பந்தத்துக்கு எடுத்து கரும்பு பயிரிட்டிருந்தார். செழிப்பாக வளர்ந்து, அறுவடைக்கு தயாராக இருந்தது. நேற்று மதியம் எதிர்பாராமல் தீப்பிடித்ததில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கரும்பு தீக்கிரையானது. தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.