உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

பெங்களூரு, வி.வி.புரம் பிரதான சாலையில், இளம் காதல் ஜோடிகள் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றபடி சாகசம் செய்தனர். இது வீடியோவாக இணையத்தில் வைரலாகியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இளம் ஜோடியினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.பெங்களூரு சாந்திநகரை சேர்ந்த சந்திரசேகர், 78, கடந்த 2ம் தேதி எம்.ஜி., சாலையில் காரை ஓட்டி சென்றார். அப்போது, ஜமீல் கான், 27, என்பவர், தனது பைக்கை இடித்துவிட்டதாக கூறி முதியவரிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அச்சமயத்தில், காரில் இருந்து 3,000 ரூபாயை திருடி சென்று விட்டார். இதையறிந்த முதியவர் நேற்று முன்தினம் அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.பெங்களூரு, ஹெச்.ஏ.எல்., பகுதியில் வசித்து வந்த நயீம், 25, என்பவரை, நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக ஷபிக், சதாம், இம்ரான் ஆகியோர் அரிவாளால் வெட்டினர். தலையில் பலத்த காயமடைந்தவர், விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நயீமின் தந்தை ஹெச்.ஏ.எல்., போலீசில் புகார் செய்தார். மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

அரிவாள் வெட்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை