மேலும் செய்திகள்
புற்றுநோயால் விரக்தி ஏட்டு தற்கொலை
18-Jul-2025
பெங்களூரின், ஜாலஹள்ளியில் வசிக்கும் யு - டியூபர் கவுதம் அர்ஸ், 32. நேற்று முன் தினம் ஷிவமொக்கா, சாகராவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றிருந்தார். ஜோக் நீர் வீழ்ச்சியின் ராஜா நீர் வீழ்ச்சியின் பாறை அருகில், அபாயமான இடத்தில் நின்று செல்பி வீடியோ எடுத்தார். அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதை கவனித்த சித்தாபுரா போலீசார், கவுதம் அர்ஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தாவணகெரே, நேமதியின், மாச்சிகொண்டனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் யஷ்வந்த், 24. இவர் நிதி நிறுவனம் ஒன்றில் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். சுனில் நாயக் என்பவரிடம் 40,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கடனை அடைக்க தாமதமானதால், வீட்டை ஜப்தி செய்வதாக மிரட்டினார். மனம் நொந்த யஷ்வந்த், நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜயநகரா மாவட்டத்தின், மல்லநாயகனஹள்ளி அருகில், நேற்று மதியம் தலைமை ஏட்டு மஞ்சுநாத், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், பைக் மீது மோதியது. இதனால் கோபமடைந்த தலைமை ஏட்டு மஞ்சுநாத், பஸ் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பிடித்து இழுத்து செருப்பால் அடித்தார். மஞ்சுநாத் மீது, கூட்லகி போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது.
மாண்டியா, நாகமங்களாவின், படுவலபட்டணா கிராமத்தில் வசிப்பவர் ஜெயம்மா, 60. இவர் நேற்று மதியம், கிராமத்தின் புறநகரில் சாலையில் நடந்து சென்றார். அப்போது, முகமுடி அணிந்து பைக்கில் வந்த மர்மநபர்கள், அவரது முகத்தில் பிளேடால் கிழித்து விட்டு, அவரது கழுத்தில் இருந்த 40 கிராம் எடையுள்ள தங்கச்செயினை பறித்து கொண்டு தப்பியோடினர். காயமடைந்த அவர், சிகிச்சை பெறுகிறார்.
குடகு மாவட்டம், மடிகேரி செம்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவப்பா, 72. இவரை நேற்று முன்தினம் யானை தாக்கியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்தார். இவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், நேற்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யானையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சிக்கமகளூரு, கொப்பாவின் பாளஹொ ன்னுார் கிராமத்தில் வீடு ஒன்றில், யூரியா உரம் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மதியம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி, 300 மூட்டை யூரியாவை பறிமுதல் செய்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18-Jul-2025