உள்ளூர் செய்திகள்

 கிரைம் கார்னர்

சூதாடிய 8 பேர் கைது

பெங்களூரின் கேத்தமாரனஹள்ளி 12வது கிராசில் உள்ள வீட்டில் நேற்று பணம் வைத்து சூதாடிய, எட்டு பேரை சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 62,000 ரூபாய், 18 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லாரி திருடிய 3 பேர் கைது

பெங்களூரு ரூரல் ஆனேக்கல் தாலுகா சூர்யாநகரில் கடந்த 21ம் தேதி இரவு, டிரைவர் சந்திரப்பாவை தாக்கி லாரியை மூன்று பேர் திருடி சென்றனர். இந்த வழக்கில் சர்ஜாபூரின் சோம புராவின் சரத்குமார், ரூபேஷ், ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மண்ணில் தொழிலாளி பலி

ராம்நகரின் மாகடியில் இருந்து தாபஸ்பேட் தொழிற்பேட்டைக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் நடக்கின்றன. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் குழாய் பதிக்க 10 அடி ஆழ பள்ளம் தோண்டப்பட்டது. பணியின் போது குழிக்குள் தவறி விழுந்து, மண்ணில் புதைந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நீரஜ்குமார் சந்திரபன்னி, 31, என்பவர் உயிரிழந்தார்.

போலீஸ் நிலையத்தில் முதியவர் பலி

யாத்கிரின் நாராயணபுரா போலீஸ் நிலையத்தில் ராஜேசாப் வாலிகர், 65, என்பவர் நில தகராறு தொடர்பான விசாரணைக்கு நேற்று முன்தி னம் வந்தார். விசாரணையின் போது மயங்கி விழுந்து இறந்தார். அவரை அடித்து கொன்றதாக, போலீஸ் மீது குற்றச்சாட்டு எழுந்ததால், சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தா 'ரெய்டு'

பல்லாரியின் சிறுகுப்பா தாலுகாவில் கிராம பஞ்சாயத்து ராஜ் உதவி இன்ஜினியராக பணியாற்றுபவர் வியாசாகர திப்பேசாமி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், இவரது வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அவரிடமிருந்து 300 கிராம் தங்க நகைகள், 800 கிராம் வெள்ளி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. வங்கிக்கணக்கில் இருந்த ஆறு லட்சம் ரூபாய் முடக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை