உள்ளூர் செய்திகள்

 கிரைம் கார்னர்

குண்டு வெடித்து வக்கீல் படுகாயம் பெ ங்களூரை சேர்ந்தவர் மோகன்; வக்கீல். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு, ராம்நகரின் கந்தகட்டா கிராமத்தில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று தங்கினார். நேற்று காலையில், பண்ணை வீட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு கிடந்த நாட்டு வெடிகுண்டை கவனிக்காமல் மிதித்தார். வெடிகுண்டு வெடித்ததில் மோகன் படுகாயம் அடைந்தார்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊழியர் நிலை கவலைக்கிடம் பெ ங்களூரு ராஜாஜிநகரில் வசிக்கும் சுரேஷ், 50, என்பவர், நேற்று முன்தினம் மாலையில், பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றார். ராம்மந்திர் மைதான பகுதியில் சென்ற போது, மரக்கிளை முறிந்து அவரது தலையில் விழுந்தது. சாலையில் மயங்கி விழுந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் அறுவை சிகிச்சை செய்தாலும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. புது பைக்கில் சென்றவர் பலி து மகூரின் பாவகடா தாலுகா தொட்டஹள்ளி கிராமத்தின் நந்தீஷ் குமார், 19. நேற்று முன்தினம் விலையுயர்ந்த பைக்கை வாங்கினார். நேற்று காலையில் கங்காசாகர் கிராஸ் பகுதியில் பைக்கில் சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட நந்தீஷ் இறந்தார். விபத்தில் 5 பேர் பலி பெ லகாவி, சிக்கோடியின் கப்பூரா டோல்கேட் அருகில், நேற்று முன்தினம் மதியம் வேகமாக சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் இருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்தது. இதில் பயணித்த ராஜேந்திர சங்கர் பாட்டீல், 50, ஷீலா ஸ்ரீபதிகாடே, 65, உயிரிழந்தனர். அது போல, கலபுரகி மாவட்டத்தின் சித்தாபுரா அருகில் பைக் மீது, அரசு பஸ் மோதியது. பைக்கில் இருந்த தேவராஜ், 19, லட்சுமிகாந்த், 20, பிரகாஷ், 23, ஆகியோர் உயிரிழந்தனர். வரதட்சணைக்காக சிறை ப ல்லாரி மாவட்டத்தின் கொட்டூர் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத், தன் மனைவிக் கு வரதட்சணை, வீட்டுமனை கேட்டு கொடுமைப்படுத்தினார். கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து, மனைவி அளித்த புகாரின்படி, 2017ல் மஞ்சுநாத்தை கைது செய்த மகளிர் போலீசார், ஷிவமொக்காவின் இரண்டா வது கூடுதல் ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் அவரது குற்றம் உறுதியானதால், அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தது. ரூ.17 லட்சம் மோசடி பெ ங்களூரின் கொடிகேஹள்ளி தேவிநகரில் வசிப்பவர் விஸ்வாஸ், இன்ஜினியர். டீக்கடை திறக்க திட்டமிட்டார். இதற்கான பொருட்களை சீனாவில் இருந்து வாங்க நினைத்தார். பொருள் வாங்க பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி தருவதாக கூறி விஸ்வாசிடம் ஒரு கும்பல் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்தது. அவர் அளித்த புகாரில் சஞ்சய்நகர் போலீசார், காஷ்மீரின் முசாமில், ஷோயப் சாவேத் உட்பட 12 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 13.90 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை