உள்ளூர் செய்திகள்

 கிரைம் கார்னர்

ரயில் மோதி 8 எருமைகள் பலி பல்லாரி, ஹொஸ்பேட்டின் மரியம்மனஹள்ளியில் வசிக்கும் காளப்பா என்பவர், நேற்று காலை மேய அழைத்து சென்றார். எருமைகள் தண்டவாளத்தை கடந்த போது, ரயில் என்ஜின் மோதியதில், எட்டு எருமைகள் உயிரிழந்தன. போதைப்பொருள் விற்றவர் கைது தட்சிண கன்னடா, மங்களூரின் பன்ட்வால் - மங்களூரு தேசிய நெடுஞ்சாலை - 73ல், அர்குலா சந்திப்பு அருகில், நேற்று மதியம் போதைப்பொருள் விற்பதாக தகவல் வந்தது. உடனடியாக அங்கு சென்று சோதனையிட்ட போலீசார், போதைப்பொருள் விற்க முயற்சித்த சுபாஷ் என்பவரை கைது செய்தனர். 1.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். 'டாட்ட ூ கலைஞர் மீது வழக்கு பெங்களூரு பேடரஹள்ளியில் வசிப்பவர் அர்ஜுன், டாட்டூ கலைஞர். கன்னட சினிமாக்களிலும் நடித்துள்ளார். இவர், சில தினங்களுக்கு முன், தன்னை கள்ளக்காதலி சம்பிரிதா இரும்பு கம்பியால் தாக்கியதாக பேடரஹள்ளி போலீசில் புகார் செய்தார். அவர் மீது வழக்குப்பதிவானது. இந்நிலையில் சம்பிரிதா அளித்த எதிர் புகாரில், திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து மிரட்டி, அர்ஜுன், பணம் பறித்ததாக கூறியிருந்தார். இந்த புகாரின்படி அர்ஜுன் மீது வழக்கு பதிவாகியுள்ளது. தாய், மகன் கொலை ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகாவின் குசனுார் கிராமத்தில் வசித்தவர் பிரேமக்கா படிகேரா, 55. இவரது மகன் அவினாஷ், 38. பிரேமக்காவுக்கும், திரகய்யா ஹொசமட் மற்றும் பசவராஜ் ஹொசமட் குடும்பத்தினர் இடையே, சொத்து தகராறு இருந்தது. நீதிமன்றத்தில், சட்டப்போராட்டம் நடத்திய பிரேமக்கா நிலத்தையும், வீட்டையும் பெற்று கொண்டார். சொத்துக்களை இழந்ததால், திரகய்யா குடும்பத்தினர் கோபம் அடைந்தனர். நேற்று மதியம் பிரேமக்கா வீட்டுக்குள் புகுந்து, அவரையும், அவரது மகன் அவினாஷையும் உருட்டுக்கட்டை, இரும்புத்தடியால் தாக்கியும், கல்லால் அடித்தும் கொலை செய்தனர். ஆடூர் போலீசார், கொலையாளிகளை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்