உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கிராமங்கள் தோறும் பால் பண்ணை அமைக்கப்படும்

 கிராமங்கள் தோறும் பால் பண்ணை அமைக்கப்படும்

பங்கார்பேட்டை: ''இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, நிரந்தர வருமானம் கிடைக்க, ஒவ்வொரு கிராமத்திலும் பால் பண்ணை அமைக்கப்படும்,'' என, கோலார் மாவட்ட பால் கூட்டுறவு சங்க இயக்குனரான, பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., - எஸ்.என்.நாராயணசாமி தெரிவித்தார். பங்கார்பேட்டையின் புவனஹள்ளி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்க கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் போது, இந்த தகவலை தெரிவித்தார். நிகழ்ச்சியில், புவனஹள்ளி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் பி.வி.கிருஷ்ணா, தாலுகா பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மஹாதேவப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை