மேலும் செய்திகள்
தர்ஷன் வழக்கு ஆக.,12க்கு ஒத்திவைப்பு
11-Jul-2025
பெங்களூரு: டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் தர்ஷன் தாய்லாந்து நாட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.இதனால், இவர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டது.டெவில் திரைப்படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், இவரின் மீது கொலை வழக்கு இருப்பதால், சுவிட்சர்லாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளில் விசா மறுக்கப்பட்டது.இருப்பினும், ஐரோப்பா நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டை தேர்வு செய்து படத்தின் இறுதி காட்சிகளை படமெடுக்க படக்குழு முட்டி மோதியது.இறுதியாக, தற்போது தாய்லாந்தில் படமெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விசா கிடைத்துள்ளதாகவும், இதற்காக ஐந்து நாட்கள், தர்ஷன் தாய்லாந்தில் தங்க உள்ளாராம். அவரது குடும்பத்தினர், நண்பர்களும் செல்ல உள்ளனர்.
11-Jul-2025