உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாமியார், நாத்தனாரை தாக்கிய மருமகள்

மாமியார், நாத்தனாரை தாக்கிய மருமகள்

பெலகாவி : சாப்பிடும் விஷயத்தில் மகனும், மருமகளும் சண்டை போட்டபோது, சமாதானம் செய்ய சென்ற மாமியாரை கட்டையால் அடித்து, கையை முறித்த மருமகள் மீது, புகார் செய்யப்பட்டுள்ளது.பெலகாவி தாலுகாவின் மாவினகட்டே கிராமத்தில் வசிப்பவர் ஜானவ்வா ஹுதலி, 80. இவரது மகன் நாகராஜ் ஹுதலி, திருமணமாகி மனைவி, பிள்ளைகளுடன் தனியாக வசிக்கிறார். அவ்வப்போது அதே பகுதியில் தன் சகோதரியுடன் வசிக்கும் தாயை பார்க்கச் செல்வார்.நேற்று முன்தினம் இரவு, தாய் ஜானவ்வா வீட்டுக்குச் சென்ற நாகராஜ் ஹுதலி, அங்கேயே சாப்பிட்டார். இதையறிந்து அங்கு வந்த ஷில்பா, 'ஏன் இங்கு சாப்பிட்டீர்கள்' என கேட்டு, கணவருடன் தகராறு செய்தார்.ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். இதை பார்த்த ஜானவ்வாவும், அவரது மகளும் சண்டையை விலக்கி சமாதானம் செய்ய முயற்சித்தனர்.கோபமடைந்த ஷில்பா, தன் மாமியாரையும், நாத்தனாரையும் மரக்கட்டையால் சரமாரியாக அடித்தார். கையில் பலத்த காயமடைந்த ஜானவ்வா, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரது மகள், லேசான காயங்களுடன் தப்பினார்.இதுகுறித்து, மாரிஹாளா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. ஷில்பாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை