சமைக்க சொன்னதால் மருமகள் தற்கொலை
சிக்கபல்லாபூர்: மாமியார் சமையல் செய்ய சொன்னதால், விரக்தி அடைந்த மருமகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிக்கபல்லாபூர் பெரசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ருதி, 18. இவருக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந் தது. இவர், வீட்டில் வேலை எதுவும் செய்யாமல், மொபைல் போன் பார்ப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால், ஸ்ருதிக்கும், அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ருதியை சமையல் செய்யும்படி அவரது மாமியார் அறிவுறுத்தினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால், இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது, ஸ்ருதிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. விஷம் குடித்தார். இதையறிந்தவர்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.