உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுதந்திர பூங்காவை மேம்படுத்த முடிவு

சுதந்திர பூங்காவை மேம்படுத்த முடிவு

பெங்களூரு: பெங்களூரிலுள்ள சுதந்திர பூங்காவை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, சென்ட்ரல் மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் கூறினார். அவர் அளித்த பேட்டி: பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுதந்திர பூங்காவின் உட்புறம், வெளிப்புறமுள்ள பகுதியில் குப்பை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் நிலுவையில் உள்ள பணிகளை முன்னுரிமை அடிப்படையில் அதிகாரிகள் முடிக்கவும். நடைப்பயிற்சி மேற்கொள்ள பூங்காவிற்கு வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், மேம்பாட்டு பணிகள் நடக்கும். பூங்காவில் முறையான மின் இணைப்பு, குடிநீர் வசதி, நல்ல தரத்திலான நடைபாதை ஆகியவை கிடைப்பது உறுதி செய்யப்படும். சுதந்திர பூங்காவில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை