உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தீபக் கேபிள்ஸ் நிறுவனத்தின் ரூ.150 கோடி சொத்து முடக்கம் 

 தீபக் கேபிள்ஸ் நிறுவனத்தின் ரூ.150 கோடி சொத்து முடக்கம் 

பெங்களூரு: சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில், தீபக் கேபிள்ஸ் நிறுவனத்தின் 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தீபக் கேபிள்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், எஸ்.பி.ஐ., வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளிடம் இருந்து 899.35 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தது. கடன் வாங்கிய பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், சட்டவிரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கிடைத்த தகவலில், ஈ.டி., எனும் அமலாக்கத்துறை விசாரிக்கிறது. கடந்த மே மாதம் 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கடேஸ்வர ராவ், நிறுவனத்தின் இயக்குனர் மகேஷ் அகர்வால் வீடுகள், அலுவலகத்தில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்ததுடன், நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக்கணக்கில் இருந்த 18 கோடி ரூபாயை முடக்கியது. மேலும் 1.27 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். வெங்கடேஸ்வரராவும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், தீபக் கேபிள்ஸ் நிறுவனத்தின், 150 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை