உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வீட்டிலேயே செய்யலாம் சுவையான பால் பிரட்!

வீட்டிலேயே செய்யலாம் சுவையான பால் பிரட்!

– நமது நிருபர் – வீட்டில் சில நிமிடங்களிலேயே சுவையான பால் பிரட் செய்யலாம். இதன் சுவை அருமையாக இருக்கும். எளிதில் செய்து அசத்தலாம்.

செய்முறை

முதலில் தோசை கல்லில் நெய் ஊற்றவும். இதில், மூன்று பிரட்களை போடவும். பிரட்டின் அனைத்து பகுதிகளிலும் நெய் படும்படி செய்யவும். பின், ஒரு கப் பாலை, பிரட் மீது கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றவும். ஊற்றிய பாலை பிரட் முழுதும் உறிஞ்சியதும் மீண்டும் பாலை ஊற்றவும். இவ்வாறு சில நிமிடங்கள் செய்து கொண்டே இருக்கவும். பிரட் நன்கு பாலில் ஊறியதும், அதன் மீது பொடி பொடியாக நறுக்கிய பிஸ்தாவை துாவவும். இதை வேறு கிண்ணத்திற்கு மாற்றவும். அவ்வளவு தான் சுவையான பால் பிரட் தயார். இதை அப்படியே சாப்பிடலாம். மாலை நேரங்களில் செய்து சாப்பிடலாம். சுவை அட்டகாசமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !