உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிக்கோடியை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

சிக்கோடியை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

பெலகாவி; ''பெலகாவி மாவட்டத்தின் சிக்கோடியை, தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ஹுக்கேரி வலியுறுத்தினார்.மேல்சபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று, அவர் பேசியதாவது:சிக்கோடிக்கும், பெலகாவிக்கும் இடையே 180 முதல் 190 கி.மீ., துாரம் உள்ளது. சிக்கோடி மக்கள், மாவட்ட அலுவலகத்துக்கு வர அவதிப்படுகின்றனர்.சிக்கோடியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வந்துள்ளது. ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.சிக்கோடிக்கு முதல்வர் வரும்போது, மாவட்டமாக அறிவிக்கப்படும் என, வாக்குறுதி அளிக்கிறார்.பெங்களூருக்கு வந்த பின், வாக்குறுதியை மறந்து விடுகிறார்.சிக்கோடியில் புற்றுநோய் மருத்துவமனை கட்ட வேண்டும். மருத்துவமனைக்கு, 10 ஏக்கர் நிலம் வழங்கும்படி, மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீலிடம் கோரினேன்.ஆனால் பட்ஜெட்டில், மருத்துவமனை கட்டும் திட்டம் அறிவிக்கப்படவில்லை.எங்கள் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.இவர்கள் சிகிச்சைக்காக மஹாராஷ்டிராவின் சாங்க்லி, மீரஜ், கொல்லாபுராவுக்கு செல்ல வேண்டியுள்ளது.சிக்கோடியில் புற்றுநோய் மருத்துவமனை கட்டினால், நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை