ஆறு ரயில்களின் புறப்படும் இடங்கள் மாற்றம்
பெங்களூரு: 'சென்னசந்திரா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால், சில ரயில்கள் புறப்படும் இடம், நிற்கும் இடம் மாற்றப்படுகிறது,' என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: பெங்களூரு சென்னசந்திரா ரயில் நிலையத்தில் உள்ள யார்டு பகுதி சீரமைக்கப்படுகிறது. எனவே, கீழ்கண்ட ரயில்கள் நின்று செல்லும் இடங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. ரயில் எண் 11301: மும்பை - கே.எஸ்.ஆர்., பெங்களூரு விரைவு ரயில், இன்று முதல் மே 2ம் தேதி வரை எலஹங்காவில் நிற்கும். எண் 11302: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - மும்பை விரைவு ரயில், ஏப்., 30 முதல் மே 2ம் தேதி வரை, எலஹங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். எண் 20687: எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி - கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில், இன்று முதல் மே 1 ம் தேதி வரை யஷ்வந்த்பூரில் நிற்கும். எண் 20688: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி ரயில், ஏப்., 30 முதல் மே 2ம் தேதி வரை, யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும். எண் 18463: புவனேஸ்வர் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு பிரசாந்தி விரைவு ரயில், ஏப்., 30 முதல் மே 2ம் தேதி வரை எலஹங்காவில் நிற்கும். எண் 18465: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - புவனேஸ்வர் பிரசாந்தி விரைவு ரயில், மே 1, 2ம் தேதிகளில் எலஹங்காவில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.