உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தர்மஸ்தலா வழக்கில் மிப்பெரிய சதி துணை முதல்வர் சிவகுமார் ஒப்புதல்

தர்மஸ்தலா வழக்கில் மிப்பெரிய சதி துணை முதல்வர் சிவகுமார் ஒப்புதல்

பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் மிகப்பெரிய சதி நடந்து உள்ளதாக, துணை முதல்வர் சிவகுமார் ஒப்பு கொண்டு உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: தர்மஸ்தலா மீதும், மஞ்சுநாதா கோவில் மீதும் அதிக நம்பிக்கை கொண்ட நபர் நான். தர்மஸ்தலா கிராம அபிவிருத்தி சங்கம் செய்யும் சேவைகளை பற்றியும், அங்கு உள்ளவர்களை பற்றியும் எனக்கு நன்கு தெரியும். தர்மஸ்தலா வழக்கின் நிலை என்ன என்பதை, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் விளக்கமாக கூறுவார். இப்பிரச்னையை பற்றி யாரோ நான்கு பேர் மட்டும் பேசவில்லை. லட்சக்கணக்கான மக்கள் பேசி வருகின்றனர். தர்மஸ்தலா வழக்கை அரசியலாக மாற்ற வேண்டாம். நுாற்றுக்கணக்கான ஆண்டுகளாக தர்மஸ்தலாவின் பராம்பரியத்தை அழிக்க சிலர் புறப்பட்டு உள்ளனர். யாரையும் தேவை இல்லாமல் அவமதிப்பது சரியல்ல. தர்மஸ்தலா வழக்கில் மிகப்பெரிய சதி நடந்து உள்ளது. மூகமுடி அணிந்த நபர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் விளைவு தான் இந்த வழக்கு. வெற்று டிரங்க் பெட்டி போன்றது தான் இந்த வழக்கு. யாரும், யாருடைய மத உணர்வுகளை புண்படுத்த கூடாது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் எக்காரணம் கொண்டும் பாதுகாக்கப்பட மாட்டார்கள். இவ்வழக்கில் தர்மஸ்தலா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டேவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. வழிபாட்டு தலங்களின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் முயற்சியை, காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. நடிகர் தர்ஷன் ஜாமினை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது அதிர்ச்சியாக உள்ளது. ஆனாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நாம் எதுவும் பேச முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி