உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் பூங்காவில் காவிரி ஆரத்தி 3 இசையமைப்பாளர்களுக்கு துணை முதல்வர் கடிதம்

கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் பூங்காவில் காவிரி ஆரத்தி 3 இசையமைப்பாளர்களுக்கு துணை முதல்வர் கடிதம்

பெங்களூரு: கே.ஆர்.எஸ்., அணையில் நடக்க உள்ள காவிரி ஆரத்தி விழாவுக்கு தனி பாடல்கள் இயற்றி இசை அமைக்கும்படி, மூன்று பிரபல இசை அமைப்பாளர்களுக்கு, துணை முதல்வர் சிவகுமார் கடிதம் எழுதி உள்ளார்.கர்நாடகாவின் கலாசாரம், பாரம்பரியம், தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து பெங்களூரு சாங்கே ஏரியில் காவிரி ஆரத்தி வெற்றிகரமாக நடந்தது.இதேபோன்று, தசராவின்போது, மாண்டியா மாவட்டம் கே.ஆர்.எஸ்., அணை அருகில் பிருந்தாவன் பூங்காவில் 'காவிரி ஆரத்தி' நடத்தப்படும் என்று துணை முதல்வர் சிவகுமார் அறிவித்திருந்தார்.அதற்காக, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தலைமையில் குழுவையும் அமைத்துள்ளார். இக்குழுவினர் நடத்திய முதல் கூட்டத்தில், தசரா பண்டிகையின் முதல் நாளான அக்டோபர் 2ம் தேதி காவிரி ஆரத்தி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திரைப்பட இசையமைப்பாளர்கள் ஹம்சலேகா, சாது கோகிலா, அர்ஜுன் ஜன்யா ஆகியோருக்கு, துணை முதல்வர் சிவகுமார், தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:கர்நாடகாவின் கலாசாரம், பாரம்பரியத்தை, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில், காவிரி ஆரத்தியின் கம்பீரத்தை மேம்படுத்தும் வகையில், பாடல் வரிகள், இசையை உருவாக்க வேண்டும்.இன்றைய காலத்துக்கு ஏற்றதாக பாடல் இருக்க வேண்டும். காவிரி அன்னையின் முழுமையான உருவம் கண்ணை கவரும் வகையில் இருக்க வேண்டும். காவிரி அன்னையின் பாரம்பரியத்தை பாதுகாப்பது மட்டுமின்றி, காவிரியின் நீர் வளம் உட்பட அதன் மகிமை, பாடல், இசை மூலம் உலகம் முழுதும் பரவ வேண்டும்.இயற்றப்பட்ட பாடல், ஆடியோ பதிவு வடிவில் கொண்டு வரப்படும். தேர்வு செய்யப்படும் பாடல், காவிரி ஆரத்தியின்போது ஒளிபரப்பப்படும்.இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை