உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மட்கா சூதாட்டம் நடத்தியவரை பிடித்த துணை சபாநாயகர்

 மட்கா சூதாட்டம் நடத்தியவரை பிடித்த துணை சபாநாயகர்

ஹாவேரி: கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி. ஹாவேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,. இவர் நேற்று காலை தன் தொகுதிக்கு உட்பட்ட குட்டாலா கிராமத்திற்கு சென்றார். அவரை சூழ்ந்து கொண்ட பெண்கள், கிராமத்தில் மட்கா சூதாட்டம் அதிகரித்து உள்ளதாக புகார் தெரிவித்தனர். சூதாட்டம் நடக்கும் இடத்திற்கு நேராக சென்ற ருத்ரப்பா லமானி, மட்கா சூதாட்டம் பற்றி நோட்டில் எழுதி வைத்திருந்தவரை பிடித்தார். போலீசுக்கு போன் செய்து அவரை ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !