உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெண் நிருபரிடம் சர்ச்சை கருத்து தேஷ் பாண்டேவுக்கு கண்டனம்

பெண் நிருபரிடம் சர்ச்சை கருத்து தேஷ் பாண்டேவுக்கு கண்டனம்

உத்தரகன்னடா: காங்கிரஸ் மூத்த தலைவரும் , ஹளியாளா தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தேஷ்பாண்டே, பெண் நிருபரின் கேள்விக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்து, எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். உத்தரகன்னடா மாவட்டத்தின், ஜோயிடா நகரில், காங்கிரஸ் மூத்த தலைவரான தேஷ்பாண்டே, நேற்று முன்தினம் ஊடகத்தினரை சந்தித்தார். அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்தார் . அப்போது பெண் நிருபர் ஒருவர், 'ஜோயிடா நகரில் தரமான அரசு மரு த்துவமனை இல்லை. இதனால் கர்ப்பிணியர் பாதிப்படைந்துள்ளனர். இப்பகுதியில் அதிநவீன மருத்துவமனை எப்போது கட்டப்படும்' என, கேள்வி எழுப்பினார். இதற்கு சரி யாக பதிலளிக்காத தேஷ்பாண்டே, 'கவலைப்படாதீர்கள். உங்களின் பிரசவத்தை, வேறு இடத்தில் நடத்த வைக்கிறோம்' என கூறி, கண்களை சிமிட்டினார். இதனால், பெண் நிருபர் தர்ம சங்கடத்துக்கு ஆளானார். 'ஏன் இப்படி பேசுகிறீர்கள் என, கேட்டதும் தேஷ்பாண்டே அங்கிருந்து நழுவினார். இந்த வீடியோ, சமூக வ லைதளங்களில் பரவியுள்ளது. பலரும் அவரை கண்டித்தனர். ஒரு கட்சியின் மூத்த தலைவர், 'பெண்ணிடம் இதுபோன்று நடந்திருக்க கூடாது' என, சாடினர். பெண் நிருபர் கூறுகையில், 'தேஷ்பாண்டேவின் செய்கை, எனக்கு அதிர்ச்சி அளித்தது. இதை அவரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால், அவரிடமிருந்து பதில் வரவில்லை' என்றார். இது குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் விஜய் பிரசாத் கூறுகையில், ''தேஷ்பாண்டேவின் பேச்சு, காங்கிரசின் சின்னத்தனமான மனப்போக்குக்கு உதாரணம். பெண்களை அவமதிப்பது சரியல்ல,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை