உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரை ஹெல்மெட்டுகள் அழிப்பு பெங்களூரு வாகன ஓட்டிகள் அச்சம்

அரை ஹெல்மெட்டுகள் அழிப்பு பெங்களூரு வாகன ஓட்டிகள் அச்சம்

பெங்களூரு: ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத அரை ஹெல்மெட்டுகள் அழிக்கப்பட்டதால், பெங்களூரு வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.தாவணகெரே மாவட்டத்தில் முழு அளவு ஹெல்மெட்டுகள் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. அப்படி இருந்தும் பலரும், பாதியளவு தலையை மறைக்க கூடிய அரை ஹெல்மெட்டுகள் அணிந்து, வாகனங்களை இயக்கி வருகின்றனர்.அரை ஹெல்மெட்டுகள் பார்ப்பதற்கு 'எல் அண்ட் டி' ஊழியர்கள் அணிவது போல தோற்றமுடையவை. இந்த அரை ஹெல்மெட்டுகள் விபத்தின் போது, பாதுகாப்பு அளிப்பதில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், தாவணகெரே எஸ்.பி., உமா பிரசாந்த் தலைமையில் சோதனை நடந்தது. இதில், 10,000க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத அரை ஹெல்மெட்டுகள், அதிக ஒலி எழுப்பும் 50க்கும் மேற்பட்ட சைலன்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இவை, தாவணகெரே நகரில் உள்ள எஸ்.பி., அலுவலகம் அருகே சாலையில் போடப்பட்டு, புல்டோசர் மூலம் இவை அழிக்கப்பட்டன. இதை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். இந்த காட்சி, இணையத்தில் பரவி வருகிறது.இதை பார்த்த பெங்களூரு வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். பெங்களூரிலும் ஐ.எஸ்.ஐ, முத்திரை இல்லாத அரை ஹெல்மெட்டுகளையே பயன்படுத்தும் பலர் உள்ளனர். தாவணகரே போன்ற நடவடிக்கைகளில் பெங்களூரு போக்குவரத்து போலீசார் இறங்கி விடுவரோ என்று வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை