மேலும் செய்திகள்
சென்னை - மங்களூருக்கு சிறப்பு ரயில்கள்
28-Sep-2025
பெங்களூரு:தீபாவளியை முன்னிட்டு, கூட்ட நெரிசலை சமாளிக்கும் நோக்கில் பெங்களூரு - ஹூப்பள்ளி - விஜயபுரா இடையே, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து, தென்மேற்கு ரயில்வேத்துறை வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகை என்பதால், வெளியூர்களுக்கு செல்லும் பயணியர் எண்ணிக்கை அதிகம் இருக்கும். பயணியர் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பெங்களூரு - ஹூப்பள்ளி - விஜயபுரா இடையே, சிறப்பு ரயில் இயக்கப்படும். ஹூப்பள்ளியில் இருந்து, 07345 எண் கொண்ட சிறப்பு ரயில் இன்று காலை 11:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 8:00 மணிக்கு பெங்களூரின் விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தை அடையும். ஹாவேரி, ஹரிஹரா, தாவணகெரே, அரசிகெரே, துமகூரு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பெங்களூரில் இருந்து 06245 எண் கொண்ட சிறப்பு ரயில் 17ம் தேதி இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2:05 மணிக்கு விஜயபுராவை அடையும். மறுமார்க்கத்தில் விஜயபுராவில் இருந்து 22ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:15 மணிக்கு பெங்களூரை அடையும். இரண்டு ரயில்களும், துமகூரு, அரசிகெரே, பீருரு, சிக்கஜாஜூர், சித்ரதுர்கா, ராயதுர்கா, பல்லாரி கண்டோன்மென்ட், தோரணகல்லு, ஹொஸ்பேட், கொப்பால், கதக், பாதாமி, பாகல்கோட், அலமாட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
28-Sep-2025