பெங்களூரு - ஹாசன், மங்களூரு, பெலகாவி கொல்லத்துக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்
பெங்களூரு: 'தீபாவளியை முன்னிட்டு, பயணியர் வசதிக்காக, பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளி, மங்களூரு, கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: ரயில் எண் 07353: எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி - மங்களூரு சந்திப்பு விரைவு ரயில், அக்., 17ம் தேதி எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:15 மணிக்கு மங்களூரு சந்திப்பு சென்றடையும். இந்த ரயில் எஸ்.எம்.எம்., ஹாவேரி, ஹரிஹரா, தாவணகெரே, பிரூர், அரிசிகெரே, துமகூரு, யஷ்வந்த்பூர், குனிகல், சென்னராயபட்டணா, ஹாசன், சக்லேஸ்பூர், சுப்ரமண்யா சாலை, கபகபுத்துார், பன்ட்வால் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் எண் 07354: மங்களூரு சந்திப்பு - யஷ்வந்த்பூர் விரைவு சிறப்பு ரயில், மங்களூரு சந்திப்பில் இருந்து அக்., 18ம் தேதி மதியம் 2:35 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:15 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும். இந்த ரயில், பன்ட்வால், கபகபுத்துார், சுப்ரமண்யா சாலை, சக்லேஸ்பூர், ஹாசன், சென்னராயபட்டணா, குனிகல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயில் எண் 06229: யஷ்வந்த்பூர் - மங்களூரு சந்திப்பு விரைவு சிறப்பு ரயில், அக்., 19ம் தேதி யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 12:15 மணிக்கு புறப்பட்டு, காலை 11:15 மணிக்கு மங்களூரு சென்றடையும். இந்த ரயில், குனிகல், சென்னராயபட்டணா, ஹாசன், சக்லேஸ்பூர், சுப்ரமண்யா சாலை, கபகபுத்துார், பன்ட்வால் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் எண் 06230: மங்களூரு சந்திப்பு - பெங்களூரு கன்டோன்மென்ட் விரைவு சிறப்பு ரயில், அக். 19ம் தேதி மங்களூரு சந்திப்பில் இருந்து மதியம் 2:35 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 12:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தடையும். இந்த ரயில், பன்ட்வால், சுப்ரமண்யா சாலை, சக்லேஸ்பூர், ஹாசன், சென்னராயபட்டணா, குனிகல், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயில் எண் 06507: பெலகாவி - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு விரைவு சிறப்பு ரயில், அக்., 18ம் தேதி பெலகாவி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 7:45 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில் எண் 06508: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - பெலகாவி விரைவு சிறப்பு ரயில், எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து அக்., 18ம் தேதி இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:35 மணிக்கு பெலகாவி சென்றடையும். இந்த ரயில் இரு மார்க்கத்திலும் லோண்டா, அல்னாவர், தார்வாட், எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி, எஸ்.எம்.எம்., ஹாவேரி, ஹரிஹரா, தாவணகெரே, பிரூர், அரிசிகெரே, துமகூரு, சிக்கபானவாரா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். எண் 06561: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - கொல்லம் விரைவு சிறப்பு ரயில், அக்., 16ம் தேதி எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் எண் 06562: கொல்லம் - பெங்களூரு கன்டோன்மென்ட் விரைவு சிறப்பு ரயில், அக்., 1 7ம் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தடையும். எண் 06567: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - கொல்லம் விரைவு சிறப்பு ரயில், அக்., 21ம் தேதி எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் 06568: கொல்லம் - பெங்களூரு கன்டோன்மென்ட் விரைவு ரயில், கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து அக்., 22ம் தேதி மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:45 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தடையும். இந்த நான்கு ரயில்களும், கிருஷ்ணராஜபுரம், பங்கார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆல்வா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கன்னுார், மாவேலிகரா, காயங்குளம் சந்திப்பில் நின்று புறப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.