உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மருத்துவர்கள் குடியிருப்பு வளாகம் குப்பைகள் குவிந்து துர்நாற்றம்

 மருத்துவர்கள் குடியிருப்பு வளாகம் குப்பைகள் குவிந்து துர்நாற்றம்

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் குடியிருப்பு காம்பவுண்டில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்துள்ளன. சுற்றுப்புற சுகாதார சீர்கேடு அதிகரித்து உள்ளது. தங்கவயல் நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அதிகாரிகள் மேற்பார்வையில் சுகாதார பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், ஒரு சில வார்டுகளில் பதவிக்காலம் முடிந்தும், பழைய 'பந்தா'வில், அதிகாரத்தில் இருப்பதாக கருதும் சிலர், நகராட்சி ஊழியர்களை மிரட்டும் போக்கில் செயல்படுகின்றனர். தங்கவயல் அரசு மருத்துவமனையின் டாக்டர்கள் குடியிருப்பு காம்பவுண்ட் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன; துர்நாற்றம் வீசுகிறது. இந்த இடத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். கொசுக்களின் பிறப்பிடமாக விஷ ஜந்துகளின் நடமாட்டமாக உள்ளது. சுத்தம், சுகாதாரம் பற்றி அறிவுரை கூறும் மருத்துவர்களின் குடியிருப்பு பகு தியே நாறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை