உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராமர் பெயரை அரசியலாக்காதீர்கள்

ராமர் பெயரை அரசியலாக்காதீர்கள்

ராம்நகர் : ''ராமர் பெயரில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள். ராம்நகர் மாவட்டத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை பற்றி பேசுங்கள்,'' என துணை முதல்வர் சுரேஷின் தம்பியும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ் தெரிவித்தார்.'தங்கள் ரியல் எஸ்டேட் தொழிலை ஊக்குவிக்கவே, காங்கிரசார் ராம்நகர் பெயரை மாற்றி உள்ளனர்' என்று பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா குற்றம்சாட்டி இருந்தார்.இதற்கு பதிலளித்து, ராம்நகரில் நேற்று சுரேஷ் அளித்த பேட்டி:ராம்நகரில் நிலம் வாங்கியவர்களின் பெயரை வெளியிடுங்கள். ராம்நகர் தாலுகா பெயர் அப்படியே தான் உள்ளது. பெங்களூரு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து 'ராம்நகர்' மாவட்டமானது. இப்பெயர், 'பெங்களூரு தெற்கு' என்று மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.பெயர் மாற்றத்தால் மாவட்ட இளைஞர்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 'பெங்களூரு' என்று குறிப்பிட்டால், கல்லுாரிகள், பல்கலைக் கழகங்களிலும், பணியிடங்களிலும் எங்களுக்கு மரியாதை கிடைக்கும் என்று மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.சில அரசியல்வாதிகள் ராமர் பெயரை வைத்து அரசியல் செய்கின்றனர். உங்கள் ஆட்சி காலத்தில், மாவட்டத்துக்கு என்ன செய்தீர்கள் என்பதை கூறுங்கள்; அதை பற்றி பேசுவோம்.கர்நாடகாவுக்கும், கன்னடர்களுக்கும் அநியாயம் நடந்துள்ளதாக மாநில பா.ஜ., தலைவர் விஜேயந்திரா கூறுகிறார். கிருஷ்ணா மேலணை, கலசா பண்டூரி, மேகதாது நீர்ப்பாசன திட்டத்துக்கு அனுமதி அளிப்பதில், தாமதம் ஏற்படுவது குறித்து அவரது கட்சி தலைவர்களுக்கு தெரிவிப்பாரா.மத்திய அரசுக்கு கன்னடர்களின் வரிப்பணம் செல்கிறது. இப்பணம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீஹார் ஆகிய மாநிலங்களுக்கு செல்லவில்லையா.நம் மாநிலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலானால், கண்டிப்பாக பெங்களூரு தெற்கு மாவட்ட பெயர் பலகையில் தங்க முலாம் பூசுவேன். குமாரசாமி எங்களுடன் இருந்தபோது என்று சொன்னார்; இப்போது வேறொன்று சொல்கிறார். ராம்நகருக்கு தனி வரலாறு இருப்பது உண்மை தான். இங்கிருந்து தான் கெங்கல் ஹனுமந்தையா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், குமாரசாமி ஆட்சி காலத்தில், அவருக்கு ஒரு சிலையாவது வைத்தாரா.அதிகாரத்தில் இருந்த போது, அவரின் பெயரை ஒருமுறையாவது உச்சரித்தாரா. தற்போது அவரின் பெயரை உச்சரிக்க காரணம் என்ன. மக்களை உசுப்பேற்ற வேண்டாம். மத்திய அமைச்சராக உள்ள அவர், நாட்டுக்கும், மாநில மக்களுக்கும் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதை அவர் தாராளமாக செய்யட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை