உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாரடைப்பை தடுக்க டிரைவர்களுக்கு பரிசோதனை

மாரடைப்பை தடுக்க டிரைவர்களுக்கு பரிசோதனை

பெங்களூரு: ''மாரடைப்பை தடுக்க ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு சிறப்பு சுகாதார பரிசோதனை செய்யப்படும்,'' என்று, சட்டசபையில் சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அறிவித்தார். ஹாசன் மாவட்டத்தில், மாரடைப்பால் இளம் தலைமுறையினர் உட்பட 41 பேர் இறந்தது தொடர்பாக, அரகலகூடு ம.ஜ.த., உறுப்பினர் மஞ்சு எழுப்பிய கேள்விக்கு, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பதில்: ஹாசனில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, 'கேத் லேப்' அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரித்து, நிதி துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்த அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்து விடும். மாரடைப்புக்கு நிறைய காரணம் உள்ளது. வாழ்க்கை முறை, உணவு முறை, மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை, சரியான துாக்கமின்மை ஆகியவை மாரடைப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஓட்டுநர்கள் தான் அதிக ஆபத்தில் உள்ளனர். ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல் நடத்தப்படும். அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க, சிறப்பு சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்படும். பள்ளி குழந்தைகளும் மன அழுத்த பிரச்னையை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கும் சிறப்பு பரிசோதனை நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை