மேலும் செய்திகள்
யானைகளால் பயிர் நாசம்
04-Mar-2025
பெங்களூரு: இம்முறை கோடைக் காலத்துக்கு முன்பே, காட்டுத்தீ துவங்கியது. தானாக தீப்பிடிக்கிறதா அல்லது விஷமிகள் தீ வைக்கிறார்களா என, கண்டுபிடிக்க ட்ரோன் கேமரா பயன்படுத்த, வனத்துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சமீப நாட்களில் கர்நாடக வனப்பகுதிகளில், காட்டுத்தீ அளவு அதிகரிக்கிறது.சில நாட்களுக்கு முன், குதுரே முக் தேசிய பூங்கா, கர்ஜகி வனப்பகுதி, குடகின் இக்குதப்பா, நாலாடி மலைப்பகுதி, சாமுண்டி மலை உட்பட, பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு, நுாற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது.வனப்பகுதிகளில் எப்படி தீப்பிடிக்கிறது என்பதை கண்டறிய, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இயற்கையாக தீப்பிடிக்கிறதா அல்லது மக்கள் தீ வைக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க, ட்ரோன் கேமரா பயன்படுத்தப்படும்.சிக்கமகளூரில் ஏற்கனவே ட்ரோன் கேமரா பயன்பாடு துவங்கியுள்ளது. மலைப்பகுதி, புல் வெளிகள் அதிகம் உள்ள வனப்பகுதிகளில், ட்ரோன் ரோந்து சுற்றி கண்காணிக்கிறது. வனப்பகுதியில் மக்களின் நடமாட்டம் உள்ளதா என்பதை ஆய்வு செய்கிறது. காலை மற்றும் மதிய வேளையில் ட்ரோன் கேமரா, வனப்பகுதியில் பறந்து காட்சிகளை பதிவு செய்கிறது.தீப்பிடித்த இடங்களில் சந்தேகத்துக்கு இடமாக, மக்கள் நடமாட்டம் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.ட்ரோன் கேமராவை பயன்படுத்தவும், வீடியோக்களை ஆய்வு செய்யவும் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
04-Mar-2025