உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டியவருக்கு அபராதம்

போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டியவருக்கு அபராதம்

ஷிவமொக்கா :குடிபோதையில் ஆம்புலன்ஸ் ஓட்டிய டிரைவருக்கு, நீதிமன்றம் 13,000 ரூபாய் அபராதம் விதித்தது.ஷிவமொக்கா நகரின், ஐ.பி., சதுக்கத்தில், இரண்டு நாட்களுக்கு முன், போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனம், குறுக்கும், நெடுக்குமாக வந்தது. இதை கண்ட போலீசார், ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய போது, ஓட்டுநர் மது குடித்திருப்பது தெரிந்தது.வாகன ஆவணங்களை ஆய்வு செய்த போது, இன்சூரன்ஸ் இல்லாததும் தெரிந்தது. எனவே, ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஷிவமொக்கா நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். விசாரணையில ஓட்டுநரின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 13,000 அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை