உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தசரா குறும்படம் வரவேற்பு

தசரா குறும்படம் வரவேற்பு

மைசூரு: நடப்பாண்டு மைசூரு தசராவுக்கு 'குறும்படம்' போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மைசூரு தசராவை விமர்சையாக கொண்டாட முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தசரா திரைப்பட திருவிழா துணை கமிட்டி, 'குறும்படம் போட்டி' அறிவித்துள்ளது. அதன்படி, 'குறும்படங்கள் 10 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். இதை ஆக., 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த குறும்படங்கள் இதுவரை சமூக வலைதளங்களில் வெளியிட் டிருக்கக் கூடாது. முதல் மூன்று குறும்படங்களுக்கு விருது வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 74115 64510 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி