உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரன்யாவின் ரூ.34.12 கோடி சொத்துக்களை முடக்கிய ஈ.டி.,

ரன்யாவின் ரூ.34.12 கோடி சொத்துக்களை முடக்கிய ஈ.டி.,

பெங்களூரு: தங்கம் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள, நடிகை ரன்யா ராவுக்கு சொந்தமான 34.12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திய வழக்கில், நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் 3ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். தங்கம் கடத்தியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தெரிய வந்ததால் அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது.இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், ரன்யா ராவுக்கு சொந்தமான பெங்களூரு விக்டோரியா லே -- அவுட் வீடு, அர்க்காவதி லே - அவுட்டில் உள்ள நிலம், துமகூரு, ஆனேக்கல்லில் தலா ஒரு நிலம் என 34.12 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை, அமலாக்கத்துறை நேற்று முடக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை