உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாகேந்திரா ஆதரவாளர்கள் வீடுகளில் ஈ.டி., சோதனை

நாகேந்திரா ஆதரவாளர்கள் வீடுகளில் ஈ.டி., சோதனை

பல்லாரி: பெலகேரி துறைமுகத்தில் இருந்து இரும்பு தாது கடத்திய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா ஆதரவாளர்கள் வீடுகளில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. பல்லாரியின் சண்டூர் வனப்பகுதியில் இருந்து, 2012ம் ஆண்டு கடத்தப்பட்ட இரும்பு தாதுக்களை, கார்வாரின் பெலகேரி துறைமுகத்தில் வனத்துறையினர் வைத்திருந்தனர். இங்கிருந்து 3.5 மில்லியன் டன் இரும்பு தாது சட்டவிரோதமாக கடத்தப்பட்டது. இதுகுறித்து ஈ.டி., எனும் அமலாக்கத்துறை விசாரிக்கிறது. இவ்வழக்கில் கார்வார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைலுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், அவர் வெளியில் உள்ளார். இரும்பு தாது கடத்தியதில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், பல்லாரி ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான நாகேந்திரா, முன்னாள் அமைச்சர் ஆனந்த்சிங் உட்பட 16 பேர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நாகேந்திராவின் நெருங்கிய ஆதரவாளர்களான நெக்குந்தி நாகராஜ், சீனிவாஸ் ராவ் ஆகியோரின் வீடுகளில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. பல்லாரி விநாயக் நகர், பசவேஸ்வரா லே அவுட்டில் உள்ள இருவரின் வீடுகளிலும், சீனிவாஸ் ராவின் ஹோட்டலிலும் சோதனை நடந்தது. சிக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை