உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலி டாக்டரின் சிகிச்சையால் எட்டு வயது சிறுமி உயிரிழப்பு

போலி டாக்டரின் சிகிச்சையால் எட்டு வயது சிறுமி உயிரிழப்பு

கோலார்: போலி டாக்டரின் தவறான சிகிச்சையால், எட்டு வயது சிறுமி பலியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பெற்றோர் வலியுறுத்து கின்றனர். கோலார் மாவட்டத்தில், போலி டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், கோலாரில் பல்வேறு இடங்களில், திடீர் சோதனை நடத்தினர். முறையான ஆவணங்கள் இன்றி, மூன்று கிளினிக்குகளுக்கு 'சீல்' வைக்கப் பட்டன. இந்நிலையில், மாலுார் தாலுகாவின், தொட்டிகல்லுார் கிராமத்தில் வசித்த 8 வயது சிறுமி, சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார். இவரது பெற்றோர், சந்தேஹள்ளி கிராமத்தில் உள்ள கிளினிக்குக்கு நேற்று காலை அழைத்துச் சென்றனர். அங்கிருந்த டாக்டர் பரிசோதனை செய்து ஊசி போட்டார். சிறிது நேரத்தில் சிறுமியின் உடல் நிலை மோசமானது. உடனடியாக தனியார் மருத் துவமனையில் சிறுமியை சேர்த்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். கிளினிக்கில் சிறுமிக்கு சிகிச்சை அளித்தவர் போலி டாக்டர் என்பது, அதன் பின் தெரிய வந்துள்ளது. அவர் போட்ட ஊசியால் பின் விளைவுகள் ஏற்பட்டு, சிறுமி இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாலுார் போலீஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ