உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விமானத்தில் பணிப்பெண்ணுக்கு தொல்லை முதியவர் கைது

 விமானத்தில் பணிப்பெண்ணுக்கு தொல்லை முதியவர் கைது

பெங்களூரு: விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார். விமானத்தில் இருக்கும், 24 வயது பணிப்பெண்ணிடம் பேச்சு கொடுத்து, அவரது இடுப்பை தொட முதியவர் ஒருவர் முயற்சித்தார். இதற்கு, அப்பெண் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும், அவர் அப்பெண்ணின் இடுப்பை வலுக்கட்டாயமாக அந்த நபர் தொட்டார். இது குறித்து, அப்பெண் விமானத்தின் கேப்டனிடம் புகார் கூறினார். கேப்டன், விமான நிலைய போலீசில் புகார் செய்யும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து, விமானம் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண், உடனடியாக போலீசிடம் புகார் செய்தார். ஏர்போர்ட்டில், அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை