மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து மெரினாவில் பசு பலி
04-Dec-2025
பெங்களூரு: ஆனேகல்லில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவரை, காளை மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூரு ஆனேகல்லின் ஹூலிமங்களா கிராமத்தை சேர்ந்தவர் ராமா ரெட்டி, 57. நேற்று முன்தினம் மதியம், 3:00 மணியளவில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காளை மாடு ஒன்று, திடீரென முதியவரை முட்டி தள்ளியது. அத்துடன், தொடர்ந்து அவரை முட்டியது. இதை பார்த்த அப்பகுதியினர், காளையை விரட்டி, முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முட்டிய காளை மாடு தனி நபருக்கு சொந்தமானதா அல்லது சாலையில் சுற்றித்திறிந்ததா என, ஹெப்பகோடி போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Dec-2025