உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இரு சக்கர வாகனங்கள் மோதியதில் முதியவர் பலி

 இரு சக்கர வாகனங்கள் மோதியதில் முதியவர் பலி

பங்கார்பேட்டை: பங்கார்பேட்டையில் இருந்து கோலாருக்கு, இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த, 70 வயது முதியவர் விபத்தில் சிக்கி பலியானார். பங்கார்பேட்டையில் இருந்து கோலாருக்கு இரு சக்கர வாகனத்தில் வெங்கடேசப்பா, 70. என்பவர், நேற்று சென்று கொண்டிருந்தார். தொட்டஹசாலா என்ற இடத்தில் எதிரே வந்த இன்னொரு இரு சக்கர வாகனம், வெங்கடேசப்பாவின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் வெங்கடேசப்பாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை