மேலும் செய்திகள்
மருதமலை முருகன் கோயில் அருகே கரடி நடமாட்டம்
27-May-2026
பெலகாவி: வன விலங்குகள் நிறைந்துள்ள, அடர்ந்த வனப்பகுதியில் காணாமல் போன முதியவர், 10 மணி நேரத்துக்கு பின், பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பெலகாவி மாவட்டம், கானாபுரா தாலுகாவின், ஹெம்மடிகா கிராமத்தில் வசிப்பவர் ஹெம்மண்ணா மதார், 65. இவர் தினமும் பீமகடா வன விலங்குகள் சரணாலயத்தில், மாடுகளை மேய்க்க செல்வது வழக்கம். கடந்த ஜூன் 10ம் தேதியன்று காலை, மாடு மேய்க்க சென்றார். மாலை மாடுகள் மட்டும், வீடு திரும்பின. இரவாகியும் ஹெம்மண்ணா மதார் வரவில்லை. பீதியடைந்த குடும்பத்தினர், கிராமத்தினருடன் சேர்ந்து, சுற்றுப்பகுதியில் தேடியும் எந்த தகவலும் தெரியவில்லை. உடனடியாக வனத்துறையினருக்கு, தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரிகள், முதியவரை கண்டுபிடிக்க ஐந்து குழுக்கள் அமைத்தனர். குழுவினரும், கிராமத்தினர் உதவியுடன் இருள் சூழ்ந்த, அடர்ந்த வனப்பகுதியில் டார்ச் வெளிச்சத்தில், முதியவரை தேடினர். வனத்தில் புலிகள், சிறுத்தைகள், கரடி, காட்டெருமை உட்பட, பல்வேறு விலங்குகள் அதிகம் உள்ளன. வனத்துறையினர் அஞ்சாமல், உயிரை பணையம் வைத்து சுற்றி வந்து தேடினர். பத்து மணி நேரத் தேடலுக்கு பின், டோங்கர்காவ் சாலை அருகில், மல்கி பண்ணை அருகில் பெரிய பாறையின் கீழ் அமர்ந்திருந்த முதியவரை கண்டுபிடித்தனர். பாதுகாப்பாக கிராமத்துக்கு அழைத்து வந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். வன விலங்குகள் அதிகம் நடமாடும், அபாயமான வனப்பகுதியில் முதியவர் உயிர் பிழைத்ததே அதிசயம் என்கின்றனர்.
27-May-2026