உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மேல்சபையில் 4 இடங்களுக்கு அக்., 23ம் தேதி தேர்தல் அறிவிப்பு

 மேல்சபையில் 4 இடங்களுக்கு அக்., 23ம் தேதி தேர்தல் அறிவிப்பு

பெங்களூரு: ''கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு, வரும் அக்டோபர் 23ம் தேதி தேர்தல் நடத்தப்படும்,'' என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடக மேல்சபையில் மேற்கு பட்டதாரி தொகுதி பா.ஜ.,வின் எஸ்.வி.சங்கனுார், தென்கிழக்கு பட்டதாரி தொகுதி பா.ஜ.,வின் சிதானந்த கவுடா, வடகிழக்கு ஆசிரியர் தொகுதி பா.ஜ.,வின் சஷில் நமோஷி, பெங்களூரு ஆசிரியர் தொகுதி காங்கிரசின் புட்டண்ணா ஆகியோரின் பதவிக்காலம் நவம்பர் 11ம் தேதி முடிவடைய உள்ளது. இதனால், இந்த நான்கு இடங்களுக்கும் தேர்தல், அக்டோபர் 23ம் தேதி நடக்கும் என, தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி அக்., 6ம் தேதி. வேட்பு மனு திரும்பப்பெற கடைசி தேதி அக்., 9ம் தேதி. 23ம் தேதி காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தேர்தல் நடக்கும். 27ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பட்டதாரிகள், ஆசிரியர்கள் மட்டுமே ஓட்டுப்போட முடியும். இத்தேர்தலில் ஓட்டளிப்போர் அனைவரும் படித்தவர்கள் என்பதால், தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ், பா.ஜ., ஏற்கனவே அறிவித்து விட்டன. நான்கு தொகுதிகளில் பெங்களூரு தொகுதியை கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வுக்கு, பா.ஜ., ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளிலும், பா.ஜ., களம் காண்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை