உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அணைகளில் மின்சாரம்: அமைச்சர் ஜார்ஜ் தகவல்

அணைகளில் மின்சாரம்: அமைச்சர் ஜார்ஜ் தகவல்

பெங்களூரு: அணைகள் மற்றும் நீர் நிலைகளில், மிதக்கும் சோலார் பலகைகளை பொருத்தி, மின்சாரம் தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் கூறியதாவது: மாநிலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அணைகள், நீர் நிலைகளில் சோலார் பலகைகள் பொருத்தி, 1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்யும்படி, கே.பி.சி.எல்., எனும் கர்நாடக மின் ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதனால், மின் உற்பத்தி செய்ய, அதிக நிலத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ