உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மின்சார பிரச்னைகள் வாட்ஸாப்பில் புகார்

மின்சார பிரச்னைகள் வாட்ஸாப்பில் புகார்

பெங்களூரு: 'மின்சாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து வாடிக்கையாளர்கள், வாட்ஸாப்பில் புகார் அளிக்கலாம்,' என பெஸ்காம் தெரிவித்து உள்ளது..சமீப காலமாக மின்வெட்டு, குறைந்த மின் அழுத்தம் போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக பொது மக்கள் புகார் அளித்து வந்தனர். இந்த புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொது மக்கள் புகார் செய்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க பெஸ்காம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.இதன் படி, வாடிக்கையாளர்கள் மின் விநியோகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து உடனடியாக புகார் அளிக்க ஏதுவான வகையில் வாட்ஸாப் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இந்த எண்களுக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர்கள் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.பகுதி வாரியாக புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் பின்வருமாறு:பெங்களூரு தெற்கு - 82778 84011; பெங்களூரு மேற்கு - 82778 84012; பெங்களூரு கிழக்கு - 82778 84013; பெங்களூரு வடக்கு - 82778 84014; கோலார் - 82778 84015; சிக்கபல்லாபூர் - 82778 84016; பெங்களூரு ரூரல் - 82778 84017; ராம்நகர் - 82778 84018; துமகூரு - 82778 84019; சித்ரதுர்கா - 82778 84020; தாவணகெரே - 82778 84021.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ