மேலும் செய்திகள்
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
17-Jun-2025
தங்கவயல் : ஸ்ரீ ராமானுஜ சித்தாந்த ராமர் கோவிலில் நேற்று முகப்பு மண்டபம் கட்டவும், துவஜ கம்பம் நிறுவுவதற்கும் பூஜைகள் நடத்தப்பட்டன.தங்கவயலில் உள்ள வைணவ கோவில்களில் பழமை வாய்ந்தது கென்னடிஸ் 3வது வட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் சித்தாந்த ராமர் கோவில். ஆரம்பத்தில் மூங்கில் தட்டியால் குடில் அமைத்து, ராம நாம பஜனைகள் நடத்தி வந்தனர். பின்னர், தங்கச் சுரங்க நிறுவன ஆங்கிலேய அதிகாரி ஹட்சன் என்பவரால் 1917ல் கட்டடமாக உருவானது. இக்கோவில் நிர்வாகிகளான, 'பெமல்' முன்னாள் பொது மேலாளர் பொற்றாமரை கண்ணன், முருகேஷ், சடகோபன், முத்து கிருஷ்ணன், பாண்டுரங்கன் ஆகியோர் ஆலோசனையின்படி கோவிலில் நேற்று கலாகர்ஷன ஹோமம், கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.கோவிலுக்கு முகப்பு மண்டபம் கட்டவும், துவஜ கம்பம் நிறுவுவதற்கும் பூஜைகள் நடந்தன.பூஜை ஏற்பாடுகளை நிர்வாகிகள் சி.தசரதன், ஸ்ரீதர், ஜே.மஞ்சுநாத், செல்வநாராயண், லோகேஷ், ஏ.வேலு, தோத்தாத்திரி ஆகியோர் செய்திருந்தனர்.கோவில் அர்ச்சகர்கள் ஆதி கேசவன், மேகநாதன் ஆகியோர் சுவாமிக்கு திருமஞ்சனம், பூஜைகள் செய்தனர். யாக பூஜையில் ஆண்டாள் கோஷ்டியை சேர்ந்த பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.
17-Jun-2025