உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சி.இ.டி., தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

 சி.இ.டி., தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பெங்களூரு: சி.இ.டி., தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க, வரும், 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக தேர்வுகள் ஆணையம் சார்பில், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக, சி.இ.டி., என்ற, பொது நுழைவுத்தேர்வு ஏப்ரல், 23, 24ம் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பிக்க நாளை, 22ம் தேதி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும், 24ம் தேதி கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நேரடியாக விண்ணப்பிக்க, 27ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !