உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு வேலை பெயரில் மோசடி போலி அரசியல்வாதி கைது

அரசு வேலை பெயரில் மோசடி போலி அரசியல்வாதி கைது

தாவணகெரே: சித்ரதுர்காவை சேர்ந்தவர் ஸ்ரீநாத், 55. இவர் தன்னை அரசியல் தலைவர் என கூறிக்கொண்டார். தனக்கு அரசில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் நன்கு அறிமுகம். நீர்ப்பாசனத்துறையில் 'டி குரூப்' வேலை வாங்கித் தர முடியும் என, ஆசை காட்டினார். ஒவ்வொருவரிடமும் மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். தாவணகெரே நகரில் வசிக்கும் நாகராஜ் என்பவர், தன் மகனுக்கு நீர்ப்பாசனத்துறையில் அட்டென்டர் பணிக்காக முயற்சித்தார். இவரை தொடர்பு கொண்ட ஸ்ரீநாத், 'வேலை வேண்டும் என்றால், 3.50 லட்சம் ரூபாய் வேண்டும்' என்றார். இதை நம்பி நாகராஜும் பணத்தை கொடுத்தார். அதன்பின் ஸ்ரீநாத், அரசு சீல்கள் வைத்த போலியான நியமன உத்தரவு கடிதத்தை நாகராஜிடம் கொடுத்தார். இதை எடுத்துக் கொண்டு, மகனுடன் பெங்களூரின் நீர்ப்பாசனத்துறை அலுவலகத்துக்கு சென்றபோதுதான், அது போலி என்பது தெரிந்தது. கே.டி.ஜே., போலீஸ் நிலையத்தில் நாகராஜ் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், நேற்று முன்தினம் ஸ்ரீநாத்தை கைது செய்தனர். இவரிடம் விசாரித்ததில், அரசு பணி ஆசை காட்டி பணம் வசூலித்து, மோசடி செய்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி