உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்

விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்

பெங்களூரு: ''வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மாநில அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்,'' என, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி: வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2,500 ரூபாய் வழங்குவதாக மாநில அரசு அறிவித்தது. இதுவரை, ஒரு ரூபாய் கூட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. முதலில், மாநில அரசு சார்பில், விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும். பின், மத்திய அரசிடம் நிவாரண தொகை கேட்கலாம். மாநில அரசு நிவாரணம் வழங்காமல், மத்திய அரசிடம் நிவாரணம் கேட்பது தவறு. உள்துறை அமைச்சர் பதவி வகிப்பவர்கள், நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். ஆனால், பிரியங்க் கார்கேவிடம் நடுநிலைமையை எதிர்பார்ப்பது தவறு. அவர் உள்துறை அமைச்சராக இருப்பதற்கு தகுதியற்றவர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !