உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கோர விபத்துகளும், உயிரிழப்புகளும்

 கோர விபத்துகளும், உயிரிழப்புகளும்

உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபுரா தாலுகா அரபைல் காட் பகுதியில், கடந்த ஆண்டு ஜனவரி, 22ம் தேதி காய்கறி, பழங்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், ஹாவேரி மாவட்டம் ஷிகாவி, சவனுாரை சேர்ந்த, 10 பேர் இறந்தனர்.  யாத்கிர் சுரபுரா பகுதியில், கடந்த பிப்ரவரி 5ம் தேதி அரசு பஸ் மோதியதில், ஒரே பைக்கில் சென்ற, 5 பேர் உயிரிழந்தனர்.  சாம்ராஜ்நகரில் கடந்த மார்ச் 1ம் தேதி கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், இன்ஜினியரிங் மாணவர்கள், 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.  பெங்களூரு - சென்னை அதிவிரைவு சாலையில், கோலார் மாவட்டம் பங்கார்பேட் தாலுகா குப்பஹள்ளி பகுதியில் கடந்த மார்ச் 2ம் தேதி பைக் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகினர்.  கலபுரகி ஜேவர்கி சொன்னா கிராஸ் பகுதியில், சுற்றுலா வேன் மீது லாரி மோதியதில், இரண்டு வயது குழந்தை உட்பட, 5 பேர் உயிர் பறிபோனது.  பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட்டி ல் கடந்த ஜூன்மாதம், 13 ம் தேதி, ஆந்திர அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில், பஸ்சில் இருந்த, நான்கு பேர் உடல்நசுங்கி இறந்தனர்.  மங்களூரு அருகே தலப்பாடி சோதனை சாவடி பகுதியில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ம் தேதி, ஆட்டோ மீது கர்நாடக அரசு பஸ் மோதிய விபத்தில், ஆட்டோவில் சென்ற, 5 பேர் இறந்தனர்.  ஹாசன் சாந்தி கிராமத்தில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலத்தில், கன்டெய்னர் லாரி புகுந்ததில், இன்ஜினியரிங் மாணவர்கள் 5 பேர் உட்பட 10 பேர் பலியாகினர்.  கலபுரகி ஜேவர்கியில் நவம்பர் 25 ம் தேதி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி மஹாந்தேஷ் பீலகி, 51, மற்றம் அவரது இரு சகோதரர்கள் பலி.  சித்ரதுர்கா ஹரியூர் ஜவன்கொண்டஹள்ளி கிராமத்தில் ஆம்னி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி, இரு வாகனங்களும் தீப்பிடித்த வழக்கில், பஸ், லாரி டிரைவர்கள், தாய், மகள் என ஏழு பேர் இறந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !