உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மனநலம் பாதித்த மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

 மனநலம் பாதித்த மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

ராம்நகர்: மனநலம் சரியில்லாத மகளை, தந்தையே பலாத்காரம் செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ராம்நகர், சென்னப்பட்டணா தாலுகாவின், அக்கூரு கிராமத்தில் வசிப்பவர் திம்மராஜு, 53. இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். 23 வயதான மூத்த மகள் மனநிலை சரியில்லாதவர். மற்ற இரண்டு மகள்கள் வேலை மற்றும் கல்விக்காக வெளியூரில் தங்கியுள்ளனர். பெங்களூரில் பெயின்டிங் பணி செய்து வரும் திம்மராஜு, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, வீட்டுக்கு வந்து செல்வார். மனநலம் சரியில்லாத மகளுடன், கிராமத்தில் வசிக்கும் மனைவி, கூலி வேலை செய்து, வாழ்க்கை நடத்தினார். மகளை வீட்டுக்குள் விட்டு, வெளியே பூட்டிக்கொண்டு பணிக்கு செல்வார். வழக்கம் போன்று மனைவி நேற்று காலை பணிக்கு சென்றிருந்தார். சிறிது நேரத்துக்கு பின், கணவர் வீட்டுக்கு வந்திருந்தார். தான் வந்துள்ள தகவலை மனைவிக்கு போனில் கூறினார். மாலை 4:00 மணியளவில் பணி முடிந்து, மனைவி வீட்டுக்கு வந்தபோது, கதவுகள் மூடப்பட்டிருந்தன. திறந்து உள்ளே சென்றபோது, வழக்கமாக நடுஹாலில் அமர்ந்திருக்கும் மகளை காணவில்லை. பக்கத்து அறை கதவை திறந்து பார்த்தபோது, மகளை கணவர் பலாத்காரம் செய்வது தெரிந்தது. தன் செயலை மனைவி பார்த்ததை கண்டு பயந்த திம்மராஜு, 'நான் தவறு செய்துவிட்டேன். யாரிடமும் கூற வேண்டாம்' என மன்றாடினார். கணவரின் ஈனச்செயலை மனைவியால் சகிக்க முடியவில்லை. தன் சகோதரனுக்கு தகவல் கூறி வரவழைத்தார். அவருடன் அக்கூரு போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தார். போலீசாரும் திம்மராஜுவை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்