உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மகனை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

மகனை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

கலபுரகி: மகனை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து, கலபுரகி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கலபுரகி நகரின், தாஜ்நகரில் வசிப்பவர் முகமது யூசுப் வாடிவாலே, 42; சென்ட்ரிங் பணி செய்தார். எப்போதும் மனைவியுடன் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து, தகராறு செய்வது முகமது யூசுப்புக்கு வழக்கம். இதனால், அவர் மீது மகன் அஸ்ரார் அகமது, 20, எரிச்சல் அடைந்தார். தாய்க்கு தொல்லை தர வேண்டாம் என, கண்டித்தார். கடந்த 2024 மே 31ம் தேதி, மனைவியுடன் முகமது யூசுப் ஏதோ காரணத்துக்காக சண்டை போட்டார். அப்போது அஸ்ரார் அகமது, 'தினமும் ஏன், அம்மாவுடன் சண்டை போடுகிறாய்?' என தட்டிக் கேட்டார். இதனால் கோபமடைந்த முகமது யூசுப், 'எப்போதும் உன் தாய்க்கு ஆதரவாக பேசுகிறாயா; எனக்கே அறிவுரை கூறுகிறாயா?' என திட்டி, காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு வந்து, மகனை சரமாரியாக குத்தினார். பலத்த காயமடைந்த மகன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி ஜூன் 3ம் தேதி உயிரிழந்தார். இதுதொடர்பாக, சவுக் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது. முகமது யூசுப்பை கைது செய்த போலீசார், விசாரணையை முடித்து, கலபுரகி நகரின் மூன்றாவது மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில், முகமது யூசுப்பின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனை, 10,500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சன்னப்பா கவுடா, நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை