மேலும் செய்திகள்
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உயிரிழப்பு
27-Mar-2025
மைசூரு: மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு, 2021 ஏப்ரல் 2ம் தேதி மலேஷியாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்து 'மின்னி' என்ற பெண் ஒரங்குட்டான் குரங்கு கொண்டு வரப்பட்டது.இதன் சேட்டையை பார்க்கவே, சுற்றுலா பயணியர் வருகை தருவர். கடந்த சில மாதங்களுக்கு முன், நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தது. மின்னியை கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு, 10 வயதான மின்னி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நிமோனியாவால் உயிரிழந்ததை, கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
27-Mar-2025