மேலும் செய்திகள்
'பைக் டாக்சி' தடை அமல் 103 வாகனங்கள் பறிமுதல்
17-Jun-2025
பெங்களூரு: பெங்களூரு ஜெயநகர், லால்பாக் பகுதியில் மஹாராஷ்டிரா பதிவெண் கொண்ட, 'பெராரி' சொகுசு கார் தினமும் செல்வது பற்றி, போக்குவரத்து போலீசார், ஆர்.டி.ஓ., அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். நேற்று காலை லால்பாக் பகுதியில் கார் செல்வதை பற்றி அறிந்த, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் காரை தடுத்து நிறுத்தினர்.ஆவணங்களை சோதனை செய்ததில், மஹாராஷ்டிராவில் காரை பதிவு செய்து, கர்நாடகாவில் வரி கட்டாமல் ஓட்டியது தெரிந்தது. இரண்டு ஆண்டில் 1.50 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்ததும் தெரிந்தது. இதையடுத்து காரை, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வரி பாக்கி செலுத்திவிட்டு, காரை எடுத்து செல்லும்படி உரிமையாளரிடம் கூறினர். அந்த நபர் பிரபல தொழில் அதிபர் என்பதால், அவர் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.
17-Jun-2025