மேலும் செய்திகள்
இருப்பு பதிவில் குளறுபடி 38.4 டன் உரம் விற்க தடை
01-Aug-2025
பங்கார்பேட்டை: உரம் சேமித்து வைத்திருந்த கிடங்கில், தீப்பிடித்ததில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உரம் தீக்கிரையானது. கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகாவின் ஹுனசனஹள்ளி கிராமத்தில், ஆக்ரோஸ் நிறுவனத்துக்கு சொந்தமான உரக்கடையும், கிடங்கும் உள்ளது. இங்கு உரம், பூச்சிகொல்லி மருந்துகள் சேமித்து வைத்திருந்தனர். நேற்று மதியம், இந்த கடையிலும், கிடங்கிலும் எதிர்பாராமல் தீப்பிடித்தது . சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியது. உள்ளே இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்பு படையினர், அங்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உரம், பூச்சி கொல்லி மருந்துகள் தீக்கிரையாகின. மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என, தீயணைப்பு படையினர் சந்தேகிக்கின்றனர்.
01-Aug-2025