உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பஸ் கவிழ்ந்ததில் ஐந்து பேர் பலி

 பஸ் கவிழ்ந்ததில் ஐந்து பேர் பலி

சித்ரதுர்கா: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் கவிழ்ந்ததில், ஐந்து பேர் உயிரிழந்தனர். பெங்களூரு பன்னரகட்டா சாலையில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் செவிலியர் மாணவியர், கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் கோவாவிலிருந்து பெங்களூரு நோக்கி திரும்பி வரும் போது, சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலுகா ஐமங்களா அருகே நேற்று காலை, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பஸ் டிரைவர் குருபிரசாத், 42, கிளினர் ஷங்கர், 26, மூன்று மாணவியர் என ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பஸ்சுக்குள் சிக்கியிருந்த, 20க்கும் மேற்பட்டோர், சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்