உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஜூனியர் மாணவர்களை கடத்தி தாக்கிய ஐந்து சீனியர்கள் கைது

 ஜூனியர் மாணவர்களை கடத்தி தாக்கிய ஐந்து சீனியர்கள் கைது

மங்களூரு: ஜூனியர் மாணவர்களை கடத்தி சென்று, உடைகளை அவிழ்த்து தாக்குதல் நடத்திய, ஒன்பது சீனியர் மாணவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டனர். மங்களூரு நகர் போலீஸ் கமிஷனர் சுதீர்குமார் ரெட்டி, நேற்று அளித்த பேட்டி: மங்களூரின் பாண்டேஷ்வராவில் உள்ள தனியார் கல்லுாரியில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் முதலாம் ஆண்டு பி.பி.ஏ., படிக்கின்றனர். செப்டம்பர் 19ம் தேதி, அவர்களில் இருவரை, அதே கல்லுாரியில் பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கடத்தி சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அடைத்து வைத்து, உடைகளை கழற்றி பெல்ட், இரும்பு சங்கிலி, பைப்புகளால் தாக்கினர். இது பற்றி கல்லுாரி நிர்வாகத்திடமோ, போலீசாரிடமோ புகார் அளித்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் என, மிரட்டினர். பாண்டேஷ்வரா போலீஸ் நிலையத்தில் மாணவர்கள் புகார் அளித்தனர். ஒன்பது சீனியர் மாணவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ரெஹான், முகமது உவைஸ், முகமது ஆதில், ரோஹன் ரமேஷ், நஷீத் அமீர் ஆகியோரை நேற்று (நேற்று முன் தினம்) கைது செய்தோம். இவர்கள் 19 வயதானவர்கள். இச்சம்பவத்தில் தொடர்புள்ள மற்ற நான்கு மாணவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ